புதன், 31 டிசம்பர், 2025

New year 2026 ... MeeManikandan

 New year 2026 ... MeeManikandan

வா 
இரு கரைகளுக்கிடையே 
இணங்கிப்புகும் நதியாகத் 
தவழ்ந்துவா 
மலர்ச் சோலைக்குள் 
ஆடிவரும் புது மணமாகத் 
திகழ்ந்துவா 
நிலவில் மயக்கவரும் 
அல்லியாய் முகிழ்ந்து வா 
அள்ளி முத்தமிடும் 
அன்னையாய் 
அன்பைக் குழைத்து வா  
மௌனக் கடலில் முளைக்கும் 
மஞ்சள் கதிராக 
உதித்துவா 
உல்லாசமாகச் சிறகுவிரிக்கும் 
புள்ளினமாகி 
எம்மை உயர்த்த வா 
குட்டி முயல் போலக் 
குதித்து விளையாடி வா 
விளைந்த கரும்பாகி 
வேர்வரை இனித்து வா 
எல்லா வளங்களையும் 
எடுத்து நல்கும் 
இயற்கையாக 
இணைந்து வா எம்மோடு 
எழுந்து வா கைகோர்த்து
நீ புது ஆண்டு 
மலரச்செய் நலம் தந்து  
மகிழச்செய் வளம் தந்து
...மீ.மணிகண்டன் 
12/31/2025

Athanaiyum Pachai Niram ... MeeManikandan

அரேபிய அனுபவங்கள், அமெரிக்க அனுபவங்கள் மேலும் சில மானுட அனுபவங்கள். வாசித்துப் பாருங்கள் கருத்துகளைப் பகிருங்கள். வாசிப்பினால் வாழ்க்கை மேம்படுமாம். வாழும் வாழ்க்கையை மேன்மையுற வாழ்வோம். 

#vamsibooks #meemanikandan 



ஞாயிறு, 13 ஜூலை, 2025

FeTNA 2023 முதற்பரிசு

FeTNA 2023 நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு



FeTNA 2023 முதற்பரிசு

FeTNA 2023 நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு



மனம் நிறை நன்றி

Thanks to Austin Tamil Sangam, Texas, USA

ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் இந்தவாரம் (Jul/12/2025) தனது செய்திமடலில் நான் அண்மையில் பரிசு பெற்றதைப் பாராட்டி எழுதியிருக்கிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வாரந்தோறும் வாசிக்கும் ஆஸ்டின் தமிழ்ச்சங்கத்தின் செய்தி மடலில் என்னைப்பற்றி எழுதியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் எனக்கு இது மிகையோ என்றுகூட எண்ணத்தோன்றியது. அவர்களின் அன்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். செய்தி மடலை வாசிக்க விரும்பும் உள்ளங்கள் முதல் கமெண்டில் இருக்கும் சுட்டியை தொடர்ந்து வாசிக்கலாம். ஆஸ்டின் தமிழ்க் சங்கத்திற்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


https://mailchi.mp/austintamilsangam/aug302024-15836248


திங்கள், 24 மார்ச், 2025

பிரபலமான இடுகைகள்