புதன், 31 டிசம்பர், 2025

New year 2026 ... MeeManikandan

 New year 2026 ... MeeManikandan

வா 
இரு கரைகளுக்கிடையே 
இணங்கிப்புகும் நதியாகத் 
தவழ்ந்துவா 
மலர்ச் சோலைக்குள் 
ஆடிவரும் புது மணமாகத் 
திகழ்ந்துவா 
நிலவில் மயக்கவரும் 
அல்லியாய் முகிழ்ந்து வா 
அள்ளி முத்தமிடும் 
அன்னையாய் 
அன்பைக் குழைத்து வா  
மௌனக் கடலில் முளைக்கும் 
மஞ்சள் கதிராக 
உதித்துவா 
உல்லாசமாகச் சிறகுவிரிக்கும் 
புள்ளினமாகி 
எம்மை உயர்த்த வா 
குட்டி முயல் போலக் 
குதித்து விளையாடி வா 
விளைந்த கரும்பாகி 
வேர்வரை இனித்து வா 
எல்லா வளங்களையும் 
எடுத்து நல்கும் 
இயற்கையாக 
இணைந்து வா எம்மோடு 
எழுந்து வா கைகோர்த்து
நீ புது ஆண்டு 
மலரச்செய் நலம் தந்து  
மகிழச்செய் வளம் தந்து
...மீ.மணிகண்டன் 
12/31/2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்