வெள்ளி, 12 ஜூன், 2026

சினிமா இயக்குனர்

சினிமா இயக்குனர்

இயக்குனரே ஒரு திரைப்படத்தின் சூத்திரதாரி என்று முதன்முதலில் நான் புரிந்துகொண்ட படம் 'பயணங்கள் முடிவதில்லை'. கமலஹாசன் படம் பார்க்கப் போகின்றேன் என்ற நினைப்போடு பெற்றோர் மற்றும் உறவினரோடு திரையரங்கம் சென்றேன். அங்கே சென்றபின் தெரிந்துகொண்டேன் அதில் நடித்தவர் கமலஹாசன் இல்லை, அந்த நடிகர் பெயர் 'மோகன்' என்று. 'R சுந்தர்ராஜன்' என்ற புது இயக்குனர் சிறப்பாக இயக்கியுள்ளார் என்று உறவினர்கள் பேசிக்கொண்டபொழுது புரிந்துகொண்டேன் இயக்குனர் என்றொருவர் திரைக்குப்பின்னால் இருப்பார் என்பதனை.
அதன் பிறகு திரைபடமென்றால் அதன் இயக்குனர் யார் என்று பார்க்கத் தொடங்கினேன். 'மண்வாசனை' திரைப்படத்தின் தொடக்கவுரையில் அந்த காந்தக்குரல் என்னை ஈர்த்தது. 'புதுமைப்பெண்' திரைப்படத்தில் சீதா என்கிற புரட்சிகரமான பாத்திரப்படைப்பு என்னைப் புல்லரிக்கச்செய்தது. 'முதல் மரியாதை' திரைப்படத்தின் டைட்டில் காட்சிகளில் பாரதிராஜாவின் திரைதோன்றலும் அறிமுக உரையும் என்னை அவர்பால் உறிஞ்சிக்கொண்டது. 'கடலோரக் கவிதைகள்' திரைப்படத்தில் தொடங்கிய 'என் இனிய தமிழ் மக்களே' என்னை முழுவதுமாக ஆட்கொள்ள, எனக்குள் முளைத்தது சினிமா இயக்குனராகும் ஆசை. பின் அவரின் படங்களை இயக்குனர் பார்வையில் காணத்தொடங்கி எனக்குள் மதிப்பிட்டுக்கொண்ட காட்சிகள் நான்மட்டுமே அறிந்தவை. சினிமா என்னைச் சிலகாலம் ஆதரித்துக்கொண்டது கடமை என்னை அங்கிருந்து வெளியில் வரச்சொல்லி இழுத்துக்கொண்டது. என் லட்சியக கனவை இன்று கதைகள் எழுதி ஆற்றுப்படுத்திக்கொள்கின்றேன்.


2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எங்களுக்காக உங்கள் சொந்தக் கனவுகளையும் இளமையையும் இழந்த நிஜ நாயகன் நீங்கள்தான் அண்ணா! உங்கள் தியாகத்திற்கு இந்தத் தங்கை என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ❤️🙏

      நீக்கு

பிரபலமான இடுகைகள்